இலங்கை ஊக்கமருந்து பயன்பாட்டிற்கெதிரான முகவராண்மையின் முறைப்பாட்டிற்கான பிரிவை செயற்படுத்துதல்

2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப இலங்கையில் ஊக்கமருந்துக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை திட்டமிடவும் இஒருங்கிணைக்கவும் மற்றும் செயற்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம.


தூய்மையான விளையாட்டுக்கான சூழ்நிலை உருவாக்குவதில் காணப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் அடையாளங் காணப்பட்டு அவற்றைத் தடுப்பதுடன் தொடர்புடைய துல்லியமான தகவல்கள் முகவராண்மையால் சேகரிக்கப்பட்டு இ பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படும். நிச்சயமற்ற தன்மைகளைக் குறைத்து நிர்வாக செயற்பாட்டு நடைமுறைகளுக்குத் தேவையான தகவல்களைப் புதுப்பித்தல் ஆகியவை இலங்கை ஊக்கமருந்து பயன்பாட்டிற்கெதிரான முகவராண்மையின் அமலாக்கல் மற்றும் செயற்படுத்தல் பிரிவின் முக்கிய செயற்பாடுகளாகும்.



எதிர்கால நன்மைகள்

தகவல் சேகரிப்புக்கான முறைகள்


நீங்கள் இலங்கையின் தூய்மையான விளையாட்டின் நலனை விரும்புபவரா ? அவ்வாறாயின் உங்களுடைய கவனம் பின்வருவனவற்றுள் ஒன்றைப்பற்றியதாக இருக்கலாம்.

    கீழ்வரும் முறைகள் மூலம் நீங்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
  1. இணையத்தளத்தினூடான படிவம்
  2. மின்னஞ்சல் -sladainquiry@gmail.com
  3. தொலைபேசி -(070)422 0 422
*அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும்.